June 21, 2010

மனதிலுறுதி வேண்டும்

பாரதியார்


 

மனதிலுறுதி வேண்டும்
மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே  பெருமை வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற  வேண்டும்
மண் பயனுற  வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்.

வீணையடி நீ எனக்கு...

பாடல் வரிகள் :பாரதியார் 
குரல் : யேசுதாஸ்


பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு, 
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு; (2)

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு  நல்லழகே! 
நல்லழகே!

ஊனமறு  நல்லழகே ஊறுசுவையே கண்ணம்மா

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு வித்தையடி  நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே ! நாதவடிவானவளே !

நல்ல உயிரே கண்ணம்மா !



வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு







June 20, 2010

யார், எப்போது, எதற்காக கூறியது தெரிந்தவர்கள் கூறவும் !!

"எட்டேகால் லட்சணமே , எமனேறும் பரியே 
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூரையில்லா   வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."