June 20, 2010

யார், எப்போது, எதற்காக கூறியது தெரிந்தவர்கள் கூறவும் !!

"எட்டேகால் லட்சணமே , எமனேறும் பரியே 
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூரையில்லா   வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."



6 comments:

pudugaithendral said...

விகடகவி யாரோ சொன்னதாக நினைவு

எமனேறும் வாகனம் - எருமை,

எட்டேகால் லட்சணம்- அவலட்சணம்
குலராமான் தூதுவன் - குரங்கு

இப்படி தன் எதிராளையை வஞ்சமாகப்புகழ்வதாக வறும். +2 படிச்சப்ப வஞ்சப்புகழ் அணிக்கு எடுத்துக்காட்டா இந்தப் பாடல் வந்தது ஞாபகமா இருக்கு.

Unknown said...

kavi kalamegam

Anonymous said...

Auvaiyar padiathu. Pulavar Kalamegatta parthu.
sathi.

நிகழ்காலத்தில்... said...

இதைப்பாருங்கள்..

http://gnanamethavam.blogspot.com/2009/12/blog-post.html

ஷர்புதீன் said...

avvai??

Anonymous said...

ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு பார்த்தீர்களா !!