April 3, 2010

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் -8

உங்களிடம் மூன்று பூட்டிய பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் சிவப்பு நிற கோலிகளும், ஒன்றில் பச்சை நிற கோலிகளும் ஒன்றில் சிவப்பு மற்றும் பச்சை நிற கோலிகள் கலந்தும் உள்ளன. பெட்டிகளின் மேல் "சிவப்பு" , "பச்சை", "சிவப்பு மற்றும் பச்சை" என்று பெயரிடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு பெட்டி கூட சரியாக பெயரிடப்படவில்லை . ஒரே ஒரு பெட்டியை திறந்து அதில் உள்ள ஒரே ஒரு கோலியை மட்டும் எடுத்து பார்ப்பதன் மூலம் மூன்று பெட்டிகளுக்கும் சரியாக பெயரிட வேண்டும். முயற்சி செய்யுங்களேன்.

2 comments:

Sivakumar said...

"சிவப்பு மற்றும் பச்சை" பெட்டியை திறந்து,

1. சிவப்பு கோலி வந்தால்

"சிவப்பு மற்றும் பச்சை" பெயரிடப்பட்டது "சிவப்பு"
"சிவப்பு" பெயரிடப்பட்டது "பச்சை"
"பச்சை" பெயரிடப்பட்டது "சிவப்பு மற்றும் பச்சை"

2. பச்சை கோலி வந்தால்

"சிவப்பு மற்றும் பச்சை" பெயரிடப்பட்டது " பச்சை"
"சிவப்பு" பெயரிடப்பட்டது "சிவப்பு மற்றும் பச்சை"
"பச்சை" பெயரிடப்பட்டது "சிவப்பு"

சரியா?

Open RG box

if R comes then

Change RG box to R
Change R box to G
Change G box to RG

if G comes then

Change RG box to G
Change R box to RG
Change G box to R

Correct?

இளந்தென்றல் said...

அப்பு சிவா ...//சரியா //
மிகவும் சரி :))
இரண்டு மொழிகளிலும் விடை அளித்து அசத்திவிட்டீர்கள் அப்பு..