February 4, 2010

என்னை பற்றி சில வரிகள்

வணக்கம் நண்பர்களே ,
முதல் முதலாக என் வலைப்பதிவில் என்ன எழுதலாம் என்று யோசித்த போது, முதலில்என்னைப்பற்றி எழுதலாம் என்று தோன்றியது . படித்துவிட்டு வேலைக்கு போகவும் பிடிக்காமல் , வீட்டில் தொலைக்காட்சி, பக்கத்து வீட்டு பெண்களுடன் அரட்டை என்று நேரத்தை வீணடிக்கவும் பிடிக்காமல் திரிசங்கு சொர்க்கத்தில் வசிக்கும் ஒரு சாதாரண குடும்பத்தலைவி நான். எதையாவதுசாதிக்க வேண்டும் என்ற உணர்வு , ஆனால் என்ன சாதிப்பது என்று புரியாத நிலை.

பிடித்தவை:
எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று இணையம் . இணையம் எனக்கு ஒரு ஆசிரியர் போல . அதில் நான் கற்றுகொண்டது நிறைய . அந்த காலத்து திரைப்படங்களில் காட்டுவார்களே! மந்திரவாதியிடம் இருக்கும் மாயக்கண்ணாடி. அப்படிதான் தோன்றியது இணையம் எனக்கு .
எதை நினைத்து தேடினாலும் அது குறித்த விவரங்கள் நொடியில் நம் கையில் .

குழந்தை பருவத்தில் இருந்தே நல்ல புத்தகங்கள் படிப்பது பிடிக்கும் . விடுமுறை நாட்களில் உணவு கூட சாப்பிட மறந்து புத்தகங்கள் படித்துக்கொண்டு இருந்துவிட்டு அம்மாவிடம் திட்டு வாங்கிய அனுபவங்கள் நிறைய உண்டு . நூலகத்தில் அனைவரும் ஆண்களாக அமர்ந்திருக்கும் போது தனி ஒரு பெண்ணாக புத்தக அலமாரியை அலசியது உண்டு .

இனிமையான இசை , சான்றோர்களின் நட்பு , இயற்கை எழில் சார்ந்த பகுதிகளில் இசையை ரசித்துகொண்டே பயணம் ,சில நேரங்களில் தனிமை, சில நேரங்களில் பலருடன் கலந்து பேசுதல் , சில நேரங்களில் அமைதி, சில நேரங்களில் கூச்சல் கொண்டாட்டம், கள்ளம் கபடமற்ற குழந்தைகள், எல்லாவற்றிற்கும் மேலாக எனது குடும்பம் இவை அனைத்தும் பிடிக்கும் .

ஜோதிடக்கலை கற்று தேறவேண்டும் என்பது நீண்ட நாள் ஆவல் . ஆனால் பாதி கிணறு தான் தாண்டி இருக்கிறேன்.

நிறைய தமிழில் எழுதவேண்டும் என்று ஆசை. அதற்கு இந்த வலைத்தளம் வாய்ப்பு அளித்ததில் மகிழ்ச்சி. 

4 comments:

friend said...

very good and interesting expression.

இளந்தென்றல் said...

thank you friend

சிநேகிதன் அக்பர் said...

வாங்க வாங்க தொடர்ந்து எழுதுங்க‌

jancyrani said...

indruthan ungal valaithalam parkiren. ungal ovoru topicum nanru.naan ungal fan enrukuda sollalam. thank you carry on