February 11, 2010

வதந்தி

தயவு செய்து அடுத்த முறை நீங்கள்  ஒரு வதந்தியை கேட்கவோ அல்லது பரப்பவோ முற்படுமுன் இதனை படிக்கவும்.

 கிரீஸ் நாட்டின் புகழ்பெற்ற தத்துவஞானி சாக்ரடீஸ்  (கி மு  469 - 399 ).

 ஒரு முறை அவரை சந்திக்க அவருக்கு பரிச்சயமான ஒரு நபர் வந்திருந்தார். அவர் சாக்ரடீசிடம்  "உங்கள் மாணவர்களில் ஒருவனை பற்றி நான்  என்ன  கேள்விப்பட்டேன்  என்றால்..."  என்று தொடங்கினார்.

சாக்ரடீஸ் உடனே   "ஒரு நிமிடம்,  நீங்கள் என்னிடம் எதுவும் சொல்வதற்கு முன் நான் நடத்தும் "test of  three "  என்னும்  ஒரு சிறிய சோதனையில்  நீங்கள் வெற்றி பெறவேண்டும் " என்றார்.

அந்த நபர் :   "test of  three? "

சாக்ரடீஸ் : "ஆமாம் , முதல் சோதனை :   தாங்கள் என்னிடம்  கூற விரும்பும் விஷயம் உண்மை என்று தங்களால் உறுதியாக கூற முடியுமா?" என்று கேட்டார்               

அந்த நபர்  "இல்லை...அது வந்து.... நான் கேள்விப்பட்டேன்..."

சாக்ரடீஸ்  " நல்லது , அப்படியென்றால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் உண்மையா இல்லையா என்று உங்களுக்கே தெரியாது இல்லையா ?  "சரி இரண்டாவது சோதனைக்கு வருவோம் . தாங்கள் சொல்ல வந்த விஷயம் என் மாணவனைப்பற்றிய எதாவது ஒரு  'நல்ல விஷயமா' ?"

அந்த நபர் தயங்கியவாறே  " இல்லை...மாறாக ...."

சாக்ரடீஸ் " ஆக என் மாணவனைப்பற்றிய   ஒரு தவறான செய்தியை, அதுவும் உண்மையா இல்லையா என்று நிச்சயமாக உங்களால் கூற முடியாத நிலையில் என்னிடம் கூற விரும்புகிறீர்கள்?"

அந்த நபர் குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பிக்க...

சாக்ரடீஸ் " கவலைப்படதீர்கள்  நீங்கள் சோதனையில் வெற்றி பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது சோதனை:  நீங்கள் என் மாணவன் பற்றி என்னிடம் இப்போது கூறப்போகும் விஷயம் எனக்கு எந்தவிதத்திலாவது பயன் அளிப்பதாக  இருக்குமா"

அந்த நபர் "இல்லை அது வந்து...."

சாக்ரடீஸ் "நல்லது , தாங்கள் சொல்லபோகும் விஷயம் உண்மையா? என்றும் தெரியாது, அது ஒரு நல்ல விஷயமா? என்றால் அதுவும்  இல்லை , அதனால் எனக்கு   பயன்  ஒன்றும்  இல்லை. இந்நிலையில்  தாங்கள் என்னிடம் அந்த விஷயத்தை எதற்காக  கூற வேண்டும் ?"

 அந்த நபர் வெட்கி தலை குனிந்தார் .

6 comments:

மதுரை சரவணன் said...

unmaiyaana , nalla payanulla, visayaththai kuriyatharkku nanri. vaalththukkal.

சிநேகிதன் அக்பர் said...

அருமை பாஸ்.

டெம்ப்ளேட் கண்ணை உறுத்துகிறது. முடிந்தால் மாற்றிவிடுங்கள்.

இளந்தென்றல் said...

unmaiyaana , nalla payanulla, visayaththai kuriyatharkku nanri. vaalththukkal.

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சரவணன் !!!

இளந்தென்றல் said...

அருமை பாஸ்.

டெம்ப்ளேட் கண்ணை உறுத்துகிறது. முடிந்தால் மாற்றிவிடுங்கள்...
மாற்றிவிட்டேன் நண்பரே ..நன்றி

jancyrani said...

ovaruvarum manathilkollavendiya vizhayam.ungal panithodara valthukkal

settaikkaran said...

இப்பெல்லாம் வதந்தியை கலரிலே அட்டையிலே போட்டு வியாபாரம் பண்ணுறாங்க! என்ன பண்ணுறது, நாம எழுதறதை எழுதிட்டிருப்போம். சரியா? :-)