தமிழின் அழகு, தமிழின் தனிச்சிறப்பு 'ழகரம் ' தானே! ஆனால் இன்று 'ழகரம்' பலரிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறது. இன்று பலர் ழகரத்தை சரியாக உச்சரிப்பதில்லை. (ழகரத்தை மட்டும் தானா...) காரணம் முறையான பயிற்சி இல்லாமையே. (உக்கும் இருந்தா மட்டும் ...) சில தமிழ் பின்னணி பாடகர்களுக்கு கூட ழகர உச்சரிப்பு சரியாக வருவதில்லை. (சில தமிழ் பாடகர்களுக்கு தமிழே வருவதில்லையே..இதற்கென்ன சொல்ல...) குழந்தைப்பருவத்திலேயே ழகர உச்சரிப்பு பயிற்சி சரியாக கொடுக்கப்பட வேண்டும். (அதுக்காக நீங்க குழந்தை பருவத்தை தாண்டி இருந்தா இந்த பயிற்சி எடுத்துக்க கூடாதுன்னு சொல்லலீங்க...) நண்பர்களே உங்கள் குழந்தைகள் ழகரத்தை சரியாக உச்சரிக்கவில்லை எனில் கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சி வாக்கியத்தை தினமும் காலையில் பலமுறை திரும்ப திரும்ப கூறிப்பழகச்செய்யவும். சில நண்பர்களுக்கு இந்த வாக்கியம் ஏற்கனவே தெரிந்திருக்க சிறிது வாய்ப்பு உள்ளது. (தெரியாமல் இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு). அரைத்த மாவையே அரைப்பதாக எண்ண வேண்டாம். தெரியாதவர்களுக்காகத்தான் குறிப்பிடுகிறேன்.
"ஏழைக்கிழவன் வியாழக்கிழமை வாழைப்பழத்தோல் வழுக்கி கீழே விழுந்தான்."
இதுதான் அந்த பயிற்சி வாக்கியம்.
பி.கு கிழவன் என்று மரியாதை இல்லாமல் கூற விரும்பாத நண்பர்கள் 'கிழவர்', 'விழுந்தார்' என்று மரியாதையாகக்கூட கூறிப்பழகலாம்.
2 comments:
kalaiyilthan kooravenduma? malaiyil kurakudatha
நல்லாயிருக்குங்க! எனக்கும் "ழ" தகராறு தான்! :-))
அடடா கடலாடி வெள்ளைக்கோழி கிழடல்ல மலடல்லவே! - இதை முதலில் நீங்கள் பிசகாமல் திரும்பத் திரும்ப பத்து தடவை சொல்லுங்கள்! நானும் இதைச் சொள்ளுகிறேன், மன்னிக்கவும், சொல்லுகிறேன்.
Post a Comment