February 5, 2010

தமிழ் இனி மெல்ல சாகும்???

உணவுக்கலப்படத்தை தடுக்க பல சட்டங்கள் ...
ஆதங்கபடுகிறது மனம்!
தமிழ் இனி மெல்ல சாகும் என்று கணித்தவர்கள் , அன்று மொழிக்கலப்பட தடுப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்திருந்தால்...

"தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் " என்று பாரதியால் பெருமை பொங்க பாடப்பட்ட தமிழ் இன்று அதன் அகராதியில் பல வார்த்தைகளை ஆங்கிலத்திற்கு தாரை வார்த்துவிட்டதே!

பன்மொழி புலமை வேறு, மொழிக்கலப்படம் வேறு என்று புரியாதவர்கள், மேலை நாட்டு நாகரீக மோகத்தால் செய்த சிறு சிறு பிழைகள் இன்று தமிழையே அழியும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனவே!

தூய தமிழில் பேச விழைபவர்கள் கூட அடுத்தவர்களின் எள்ளி நகையாடலுக்கு பயந்து ஆங்கிலம் கலந்து பேசவேண்டிய சூழல். (இதில் நானும் அடக்கம் )

நம் அடுத்த தலைமுறைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் சொற்களையாவது விட்டு வைப்போமா என்ற அச்சம் என்னுள் எழுகிறது .

"தமிழுக்கு அமுதென்று பேர் " என்ற திரைப்பட பாடல் வரிகளை நினைத்துகொள்கிறேன் . அமுதிலும் கலப்படம் இன்று ...

நண்பர்களே தமிழைக்காப்பாற்றும் உபயம் ஏதும் அறிந்திருந்தால் கூறுங்களேன்.

2 comments:

மதுரை சரவணன் said...

thamil ini mella saakum enru varuntha vendaam. thamilai valarkka naammai pol niraya ullanar. ungkal pathivu nanaraai thamilil vanthullathu.

jancyrani said...

nalla article.i like it. can give a comment in english?