இரண்டு பேருந்துகள்
நேருக்கு நேராய்
மோதிக்கொண்டதில்
சாலையோரம்
உயிருக்காக போராடிக்கொண்டு
ஒருவன் !
அவனிடமுள்ள உடமைகளுக்காக
போராடிக்கொண்டு அவனைச்சுற்றி பலர் !
ஓ மானிடனே ! நீ
மனித நேயம் என்ற சொல்லை
மறந்து போனது எப்பொழுது?
மண்ணிற்கும், பொன்னிற்கும்
மதிப்பளித்து அவற்றை
உனதுடமைகளாய்
மாற்றிக்கொள்ளும் நீ
சக மனிதனின் பசியை மதிக்க
மறந்து போனது எப்பொழுது ?
வருங்கால சந்ததிக்கு
வருந்தி வருந்தி
சேமிக்கும் நீ
பல மனிதர்களின் நிகழ்காலமே
நிர்மூலமாய் இருப்பதை
நினைத்துப்பார்க்க
மறந்து போனது எப்பொழுது ?
தங்கமும் வைரமும் சேர்த்து
வைத்து தனதென்று கூறி
ஆரவாரிக்கும் நிலை மாறி
தன்னிடமுள்ள ஒரு வேளை
உணவையும் பிறர் பசிக்களித்து
அமைதியாய் ஆனந்திக்கும்
மனோபாவம் மானிடர்க்கு
வரப்போவது எப்பொழுது?
4 comments:
கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி !
தங்கமும் வைரமும் சேர்த்து
வைத்து தனதென்று கூறி
ஆரவாரிக்கும் நிலை மாறி
தன்னிடமுள்ள ஒரு வேளை
உணவையும் பிறர் பசிக்களித்து
அமைதியாய் ஆனந்திக்கும்
மனோபாவம் மானிடர்க்கு
வரப்போவது எப்பொழுது ?
ம்ம்ம்... எப்பொழுது
அவ்வளவும் கோவம் கோவம்...நல்ல பதிவு வாழ்த்துக்கள்
வாங்க சங்கர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கோவம் எல்லாம் இல்லீங்க செந்தில். ஒரு ஆதங்கம் அவ்ளோதான்
Post a Comment