July 10, 2010

காற்று வெளியிடைக் கண்ணம்மா



காற்று வெளியிடைக் கண்ணம்மா 
கண்ணம்மா...

காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்  (2)

அமுதூற்றினை ஒத்த இதழ்களும் 
இதழ்களும் ...
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நில ஊறித் ததும்பும் விழிகளும் (2) 


பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் 
பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் 
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்

எனை வேற்று நினைவின்றித் தேற்றியேஇங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! (2 )

இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் 

 நீயென தின்னுயிர் கண்ணம்மா ..
நீயென தின்னுயிர் கண்ணம்மா 
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் (2)

துயர் போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன் எனக் கொண்ட பொழுதிலே  (2 )


 என்றன் வாயினிலே அமு தூறுதேகண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ...
கண்ணம்மா...
 கண்ணம்மாவென்ற என்ற பேர்சொல்லும் போழ்திலே 
 என்றன் வாயினிலே அமு தூறுதே
 உயிர்த் தீயினிலே வளர் சோதியேஎன்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே
 இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் 

June 21, 2010

மனதிலுறுதி வேண்டும்

பாரதியார்


 

மனதிலுறுதி வேண்டும்
மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே  பெருமை வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற  வேண்டும்
மண் பயனுற  வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்.

வீணையடி நீ எனக்கு...

பாடல் வரிகள் :பாரதியார் 
குரல் : யேசுதாஸ்


பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு, 
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு; (2)

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு  நல்லழகே! 
நல்லழகே!

ஊனமறு  நல்லழகே ஊறுசுவையே கண்ணம்மா

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு வித்தையடி  நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே ! நாதவடிவானவளே !

நல்ல உயிரே கண்ணம்மா !



வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு







June 20, 2010

யார், எப்போது, எதற்காக கூறியது தெரிந்தவர்கள் கூறவும் !!

"எட்டேகால் லட்சணமே , எமனேறும் பரியே 
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூரையில்லா   வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."



April 9, 2010

Windows XP ல் desktop shortcut icon இல் உள்ள arrow mark கினை நீக்குவது எவ்வாறு?


நமது டெஸ்க்டாப்பில் உள்ள short cut icon களில் கீழ் பகுதியில் ஒரு சிறிய arrowmark இருப்பதை  கவனித்து இருப்பீர்கள். அது shortcut icon களின் அழகை கெடுப்பது போல் இருக்கும். அவற்றை நீக்குவதற்கான  வழிமுறை இதோ...

   1.  Start-->Run-->regedit 


   2. HKEY_CLASSES_ROOT\lnkfile ( lnkfile  கண்டுபிடிக்க கொஞ்சம் அதிகமாக  scroll     செய்ய வேண்டி இருக்கும் )

   3.  lnkfile  செலக்ட் செய்ததும்  IsShortcut registry value வை right click செய்து   delete   செய்துவிடவும்.

   4 . உங்கள் கம்ப்யூட்டர்   ஐ ஒரு முறை restart செய்யவும்.
  
அவ்ளோதான் இப்போ உங்க கம்ப்யூட்டர் shortcut icon களில் உள்ள arrowmark  போயே போச்சு ...

April 7, 2010

ஒரே நேரத்தில் பல yahoo messenger account இல் login செய்வது எப்படி ?

 
1 .   Start ----> Run . தேர்வு செய்யவும்.

2 . Regedit  என்று type செய்து enter செய்யவும்.

3 . HKEY_CURRENT_USER -------> Software ------> yahoo------>pager------>Test

4.  வலது பக்கத்தில் உள்ள காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து, new -->Dword value  தேர்வு செய்யவும்.

5.  newvalue  # என்பதற்கு பதிலாக plural என்று பெயர் மாற்றம் செய்யவும்.

6.  அதில் Double click செய்து 0 விற்கு பதிலாக 1 என்ற மதிப்பினை assign செய்யவும் 



7. இப்பொழுது registry விண்டோ வை மூடிவிடவும். 


8 . இப்பொழுது உங்கள் கணினியில்  எத்தனை yahoo messenger கணக்குகளில்    வேண்டுமானாலும்   ஒரே நேரத்தில் login செய்ய முடியும்

April 6, 2010

உங்கள் கணினியை shutdown செய்வதற்கு shortcut

 shutdown செய்வதற்கு shortcut
வழக்கமாக கணினியை shutdown செய்ய வேண்டும் என்றால் ஸ்டார்ட் மெனுவில் சென்று, turn off   கம்ப்யூட்டர்  செலக்ட் செய்து பிறகு shutdown செய்ய வேண்டும் அல்லவா?
இதற்கு பதிலாக நமது desktop இலேயே shutdown இற்கு  ஒரு shortcut icon இருந்தால் எப்படி இருக்கும் ?
அதற்கு வழிமுறை இதோ..
1 . desktop இல் காலியாக உள்ள இடத்தில் mouse சை வைத்து ரைட் கிளிக் செய்யவும் 
2.   New >>Shortcut செலக்ட் செய்யவும்.
3 . பின்னர் வரும் shortcut wizard விண்டோ வில்  Shutdown -s -t 00 என்று  type   செய்யவும்.
4 . Click Next.
5 . shortcut இற்கு  shutdown என்று  பெயர் அளித்து finish இல் கிளிக் செய்யவும்
6 .இதற்கு தகுந்த ஒரு icon தேர்வு  செய்யவும்
7 . உங்கள் shortcut தயார்.

இதே போல் restart மற்றும் loggoff   போன்றவற்றிற்கும் shortcut உருவாக்கலாம்.
restart   இற்கு  Shutdown -r -t 00 என்று type செய்யவும். மற்ற வழிமுறைகள் மேலே உள்ளதுதான்.
loogoff இற்கு Shutdown -l -t 00 என்று type செய்யவும் .



April 5, 2010

யாருக்காவது தெரிஞ்சா காரணம் சொல்லுங்க ப்ளீஸ் !

புதுசா ஒரு folder உருவாக்கறது  அவ்வளவு கஷ்டமா என்ன?  அததாங்க ட்ரை பண்றேன் ரொம்ப நாளா. ஆனா முடியல . காரணம் என்னவா  இருக்கும்?
யாரவது ட்ரை பண்ணி சொல்லுங்களேன். ஒரே ஒரு கண்டிஷன் என்னனா அந்த folder பேரு
"CON " னு இருக்கணும்  அவ்ளோதான்.

April 3, 2010

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் -8

உங்களிடம் மூன்று பூட்டிய பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் சிவப்பு நிற கோலிகளும், ஒன்றில் பச்சை நிற கோலிகளும் ஒன்றில் சிவப்பு மற்றும் பச்சை நிற கோலிகள் கலந்தும் உள்ளன. பெட்டிகளின் மேல் "சிவப்பு" , "பச்சை", "சிவப்பு மற்றும் பச்சை" என்று பெயரிடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு பெட்டி கூட சரியாக பெயரிடப்படவில்லை . ஒரே ஒரு பெட்டியை திறந்து அதில் உள்ள ஒரே ஒரு கோலியை மட்டும் எடுத்து பார்ப்பதன் மூலம் மூன்று பெட்டிகளுக்கும் சரியாக பெயரிட வேண்டும். முயற்சி செய்யுங்களேன்.

March 26, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 7 விடை

அதன் பெயரை உச்சரிக்கும்போதே அது அழிந்து விடும் அளவிற்கு மென்மையானது. அது என்ன? என்று கேட்டு இருந்தேன்.


விடை : மௌனம்

March 25, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 7

அதன் பெயரை உச்சரிக்கும்போதே அது அழிந்து விடும் அளவிற்கு மென்மையானது. அது என்ன?

March 22, 2010

HTML தெரியாதவர்களும் -உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட் நீங்களே வடிவமைக்க

உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்  நீங்களே வடிவமைக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும். html கோடிங்  தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மிகவும் எளிதானது.

March 18, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -6

ஒரு மனிதர் டிசம்பர்  6 ஆம் தேதி, வியாழக்கிழமை  அன்று இறந்து விடுகிறார். அதே வாரம்  டிசம்பர் 5 ஆம் தேதி, புதன் கிழமை அன்று புதைக்கப்படுகிறார். இது எவ்வாறு ?

இணையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட படத்தினை தேடி எடுப்பது எப்படி?

 இணையத்தில்  குறிப்பிட்ட வார்த்தைகள் சார்ந்த விஷயங்களை தேட கூகிள் போன்ற தேடு பொறி வலைத்தளங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. அதே போல் ஒரு குறிப்பிட்ட படத்தை  இணையத்தில் தேட  இங்கே கிளிக் செய்யவும்.  இதில் உங்கள் கணினியில் உள்ள ஒரு படத்தையோ அல்லது வேறு ஒரு இணைய தளத்தில் உள்ள ஒரு படத்தையோ  அப்லோட் செய்தால் நொடிகளில் அந்த  படத்தினை கொண்ட அனைத்து இணையதளங்களின் பட்டியலையும் காணலாம். இந்த இடுகை பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களையும் உங்கள் வாக்குகளையும் வழங்கவும்.

March 15, 2010

இன்போசிஸ் சுதா மூர்த்தி செய்த சாதனை என்ன?


எம் டெக்  பட்டதாரியான இவர் செய்த சாதனை தான் என்ன? எம் டெக் (கணினி அறிவியலில்) தங்கப்பதக்கம் வாங்கினாரே அதுவா? அல்லதுபொதுச்சேவையில் ஈடுபட்டு பல விருதுகள் வாங்கி  இருக்கிறாரே அதுவா? அல்லது  இன்போசிஸ் என்ற நிறுவனம் வளரக்  காரணமாக இருந்தாரே அதுவா?  
இவை எல்லாம் அவர் செய்த சாதனைகளாக இருக்கலாம் ஆனால் அனைத்திற்கும் மேலாக அவர் செய்த சாதனைகளில் என்னை கவர்ந்தது., எனக்கு பிடித்த பத்து பெண்களில் ஒருவராக அவரது பெயரை எழுத வைத்தது என்னவெனில் 'டாட்டா  மோட்டோர்ஸ்' என்று இன்று அழைக்கப்படும் 'டெல்கோ' வில் பணி புரிந்த முதல் பெண் என்பதுதான்.
இவர் 'indian institute of science   bangalore' இல் எம்.டெக் படித்துக்கொண்டிருந்தபோது 'டெல்கோ' வின்  வேலை வாய்ப்பிற்கான   விளம்பரம் ஒன்றில் "wanted bright young graduates." என்ற வரிகளை பார்த்திருக்கிறார்.
அந்த விளம்பரத்தின் கடைசி வரிகளில் "female candidates need not apply" என்ற வரிகளை பார்த்து பொங்கி எழுந்து ஒரு அஞ்சலட்டையில்  JRD TATA விற்கு "டாட்டா  என்ற  முன்னணியில் உள்ள  ஒரு நிறுவனத்தில் இது போன்ற பால்நிலை பாகுபாடு காட்டப்படுவது சரியா?" என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதி விட்டு அது குறித்து மறந்தும் விட்டார். ஆனால் சில நாட்களிலேயே  'டெல்கோ' விலிருந்து வந்த ஒரு தந்தியின் வாயிலாக அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த  தந்தியில் அவரை நேர்முகத்தேர்விற்காக  அழைத்திருப்பதாகவும், மேலும்  போக்குவரத்து செலவிற்காக முதல் வகுப்பு பயணக்கட்டணம் வழங்கப்படும்  என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.நேர்முக தேர்வில்  பங்கேற்ற அவர்    வேலைக்காக தேர்வு  செய்யப்பட்டார்.
அவரது கடிதம் கண்ட JRD டாட்டா, அவரை நேர்காணலுக்கு அழைக்கும்படியும், அவருக்கு திறமை இருக்கும் பட்சத்தில் அவரை தேர்வு செய்யும் படியும் தேர்வு செய்யும் குழுவிற்கு அறிவுறுத்தி இருந்தார் என்று அவர் பணியில் சேர்த்தும் தெரிந்து கொண்டாராம்.

March 10, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்! (தொடர்பதிவு)

என்னையும் ஒரு பதிவராகக்  கருதி தொடர்பதிவு எழுத அழைத்த வெள்ளிநிலா  அவர்களுக்கு நன்றி..

 எனக்கு பிடித்த என்னை வியக்கச்செய்த பத்துப் பெண்கள் இதோ..

அவர்கள் ஒவ்வொருவரும் செய்த சாதனைகளை தனித்தனி பதிவுகளாக பின்னர் வெளியிடுகிறேன்.

1 . அன்னை தெரசா
 

2 .  கல்பனா சாவ்லா 

3 .  ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்

4 . டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 

5 .  சுதா மூர்த்தி  (இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி )

6 .  ஹெலன் கெல்லர் 

7 .  ஒளவையார்
 

8 மேரி கியுரி


9 தில்லையாடி வள்ளியம்மை

10 கிரண் பேடி
 
 இந்த தொடர்பதிவை தொடர நான்  அழைக்கும் நண்பர்கள் - 
சேட்டைக்காரன் 
செந்தில் 
மதுரை சரவணன் 
அகல் விளக்கு 
சிநேகிதன் 
சுரேகா

நிபந்தனைகள்
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

இதையும் கண்டுபிடியுங்கள் விடை

நீதிபதியின் மகன் காவல் துறை அதிகாரி...
காவல் துறை அதிகாரியின் தந்தை வழக்கறிஞர்..
எனில் நீதிபதி யார்?


விடை: நீதிபதி காவல் துறை அதிகாரியின்  தாய்.





March 7, 2010

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் - 4 விடை

                             தராசுதட்டு 1           தராசுதட்டு 2       வெளியே

முதல்முறை                      19                        19                           1

தராசுதட்டுகள் இரண்டும் சமம் எனில் வெளியே உள்ள ஒரு பழம் தான் எடை மிகுந்தது.
சமம் இல்லை எனில் எந்த தட்டில் எடை அதிகமாக உள்ளதோ அதில் உள்ள பழங்களை 
இரண்டாம் முறை எடை போடவேண்டும்.

இரண்டாம்முறை           9                               9                             1     
மூன்றாம் முறை            3                                3                             3             
நான்காம் முறை            1                                 1                            1

சரியான விடை அளித்த செந்தில், மங்குனி அமைச்சர் , சுகு , "ரொம்ப சூப்பர்" அனைவருக்கும் வாழ்த்துக்கள். "ரொம்ப சூப்பர்" வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள்.

March 6, 2010

இதையும் கண்டுபிடியுங்கள்

நீதிபதியின் மகன் காவல் துறை அதிகாரி...
காவல் துறை அதிகாரியின் தந்தை வழக்கறிஞர்..
எனில் நீதிபதி யார்?

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் - 4

உங்களிடம் கொடுக்கப்பட்ட, பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றும்  39 ஆரஞ்சு பழங்களில்  ஒன்று மட்டும் அதன் எடையில் அதிகமாக  இருக்கிறது எனில்  அந்த அதிக  எடை கொண்ட பழத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள். தராசினை நான்கு முறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

February 25, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்-3 விடை

What is the english word, which is pronounced by everyone incorrectly?


விடை "incorrectly"  தான். வேற என்ன?




கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -3

What is the english word, which is pronounced by everyone incorrectly?

February 24, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -2

ஒருவருடைய வயது 1980 இல் 20 ஆனால்  1985 இல் 15. எப்படி ?

February 21, 2010

பழகலாம் வாங்க...

தமிழின் அழகு, தமிழின் தனிச்சிறப்பு  'ழகரம் ' தானே! ஆனால் இன்று 'ழகரம்' பலரிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறது. இன்று பலர் ழகரத்தை  சரியாக உச்சரிப்பதில்லை. (ழகரத்தை மட்டும் தானா...) காரணம் முறையான பயிற்சி இல்லாமையே. (உக்கும்  இருந்தா மட்டும் ...) சில தமிழ் பின்னணி பாடகர்களுக்கு  கூட ழகர உச்சரிப்பு சரியாக வருவதில்லை. (சில தமிழ் பாடகர்களுக்கு தமிழே வருவதில்லையே..இதற்கென்ன சொல்ல...) குழந்தைப்பருவத்திலேயே ழகர உச்சரிப்பு பயிற்சி சரியாக கொடுக்கப்பட வேண்டும். (அதுக்காக நீங்க குழந்தை பருவத்தை தாண்டி இருந்தா இந்த பயிற்சி எடுத்துக்க கூடாதுன்னு  சொல்லலீங்க...) நண்பர்களே உங்கள் குழந்தைகள் ழகரத்தை சரியாக உச்சரிக்கவில்லை எனில் கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சி வாக்கியத்தை தினமும் காலையில் பலமுறை திரும்ப திரும்ப கூறிப்பழகச்செய்யவும். சில நண்பர்களுக்கு இந்த வாக்கியம் ஏற்கனவே தெரிந்திருக்க  சிறிது வாய்ப்பு உள்ளது. (தெரியாமல் இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு). அரைத்த மாவையே அரைப்பதாக எண்ண வேண்டாம். தெரியாதவர்களுக்காகத்தான்   குறிப்பிடுகிறேன்.

"ஏழைக்கிழவன்  வியாழக்கிழமை வாழைப்பழத்தோல் வழுக்கி கீழே விழுந்தான்."

இதுதான் அந்த பயிற்சி வாக்கியம்.

பி.கு கிழவன் என்று மரியாதை இல்லாமல் கூற விரும்பாத நண்பர்கள் 'கிழவர்', 'விழுந்தார்' என்று மரியாதையாகக்கூட கூறிப்பழகலாம்.

February 19, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் விடை

ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளின் போது அவளது வயது எட்டு.
இது எப்படி சாத்தியம்? யாராவது தெரிந்தால் கூறுங்களேன்.

 புதிருக்கான விடை: அந்த குழந்தை பிறந்தது பிப்ரவரி 29 , 1896.
வழக்கமாக லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறந்தநாள் வரும். ஆனால் இங்கு அடுத்த லீப் ஆண்டு 1900 இல்லை.  ஏனெனில் எண் 400 ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் மட்டுமே லீப் ஆண்டு  ஆகும். எனவே அடுத்த  பிப்ரவரி 29  ஆம் தேதி ,  1904 இல் தான் வந்தது . அப்போது அந்த குழந்தைக்கு  வயது 8 .
பெயரில்லா நண்பர் (மன்னிக்கவும் : பெயர் வெளியிட விரும்பாத நண்பர்) மிகுந்த முயற்சிக்குப்பிறகு  சரியான விடையை கூறி இருக்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே ...

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளின் போது அவளது வயது எட்டு .
இது எப்படி சாத்தியம் ? யாராவது தெரிந்தால் கூறுங்களேன் .

February 11, 2010

வதந்தி

தயவு செய்து அடுத்த முறை நீங்கள்  ஒரு வதந்தியை கேட்கவோ அல்லது பரப்பவோ முற்படுமுன் இதனை படிக்கவும்.

 கிரீஸ் நாட்டின் புகழ்பெற்ற தத்துவஞானி சாக்ரடீஸ்  (கி மு  469 - 399 ).

 ஒரு முறை அவரை சந்திக்க அவருக்கு பரிச்சயமான ஒரு நபர் வந்திருந்தார். அவர் சாக்ரடீசிடம்  "உங்கள் மாணவர்களில் ஒருவனை பற்றி நான்  என்ன  கேள்விப்பட்டேன்  என்றால்..."  என்று தொடங்கினார்.

சாக்ரடீஸ் உடனே   "ஒரு நிமிடம்,  நீங்கள் என்னிடம் எதுவும் சொல்வதற்கு முன் நான் நடத்தும் "test of  three "  என்னும்  ஒரு சிறிய சோதனையில்  நீங்கள் வெற்றி பெறவேண்டும் " என்றார்.

அந்த நபர் :   "test of  three? "

சாக்ரடீஸ் : "ஆமாம் , முதல் சோதனை :   தாங்கள் என்னிடம்  கூற விரும்பும் விஷயம் உண்மை என்று தங்களால் உறுதியாக கூற முடியுமா?" என்று கேட்டார்               

அந்த நபர்  "இல்லை...அது வந்து.... நான் கேள்விப்பட்டேன்..."

சாக்ரடீஸ்  " நல்லது , அப்படியென்றால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் உண்மையா இல்லையா என்று உங்களுக்கே தெரியாது இல்லையா ?  "சரி இரண்டாவது சோதனைக்கு வருவோம் . தாங்கள் சொல்ல வந்த விஷயம் என் மாணவனைப்பற்றிய எதாவது ஒரு  'நல்ல விஷயமா' ?"

அந்த நபர் தயங்கியவாறே  " இல்லை...மாறாக ...."

சாக்ரடீஸ் " ஆக என் மாணவனைப்பற்றிய   ஒரு தவறான செய்தியை, அதுவும் உண்மையா இல்லையா என்று நிச்சயமாக உங்களால் கூற முடியாத நிலையில் என்னிடம் கூற விரும்புகிறீர்கள்?"

அந்த நபர் குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பிக்க...

சாக்ரடீஸ் " கவலைப்படதீர்கள்  நீங்கள் சோதனையில் வெற்றி பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது சோதனை:  நீங்கள் என் மாணவன் பற்றி என்னிடம் இப்போது கூறப்போகும் விஷயம் எனக்கு எந்தவிதத்திலாவது பயன் அளிப்பதாக  இருக்குமா"

அந்த நபர் "இல்லை அது வந்து...."

சாக்ரடீஸ் "நல்லது , தாங்கள் சொல்லபோகும் விஷயம் உண்மையா? என்றும் தெரியாது, அது ஒரு நல்ல விஷயமா? என்றால் அதுவும்  இல்லை , அதனால் எனக்கு   பயன்  ஒன்றும்  இல்லை. இந்நிலையில்  தாங்கள் என்னிடம் அந்த விஷயத்தை எதற்காக  கூற வேண்டும் ?"

 அந்த நபர் வெட்கி தலை குனிந்தார் .

February 10, 2010

எரிமலையும்... பனிப்புயலும்...

நான் இணையத்தில் தேடி எடுத்த சில அரிதான புகைப்படங்கள் கீழே..

ஹவாய் எரிமலை : (புகைப்படங்கள் james balog )





பனிப்புயல் : (புகைப்படங்கள் jean_pierre scherrer) 

 

 





February 7, 2010

என் குழந்தைப்பருவம்

என் குழந்தைப்பருவ   நிகழ்வுகளில் பல இன்றும் பசுமரத்து ஆணி போல என் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். என் வாழ்வின் பொற்காலம் என்று என் குழந்தைப்பருவத்தைக்  கூறலாம். நான் எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை தமிழகத்தின்  ஒரு சிறிய கிராமத்தில் தான் இருந்தோம். அப்பா பள்ளி ஆசிரியர். அப்பா, அம்மா, தம்பி, தங்கை, நான் இதுதான் எங்கள் குடும்பம். அந்த  கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய  படித்தவர்களில் அப்பாவும் ஒருவர்.

இது நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது நடந்த ஒரு நிகழ்வு. அப்போதெல்லாம் முதியோர்க்கல்வி என்று ஒன்று மாலை வேளைகளில் பள்ளி வளாகத்தில் நடத்தப்படும். அதற்கான ஆள் சேர்க்கை நடை பெறும்போது நான்கு இளைஞர்கள் (20  வயதிற்கு உட்பட்டவர்கள்) தங்களையும்  முதியோர் கல்வியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் முறையிடஇவ்வளவு இளம் வயதில் முதியோர் கல்வியில் சேர்த்துக்கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் வாதிட்டுக்கொண்டிருக்க, இந்நிலையில் தலைமை ஆசிரியர் அறையில் நுழைந்த என் தந்தை, அவ்விளைஞர்களின் படிப்பார்வத்தை பார்த்து, தினமும் மாலை வேளைகளில் வீட்டிற்கு வந்தால், தானே அவர்களுக்கு படிக்க எழுத சொல்லி தருவதா கூறினார் (இலவசமாகத்தான்) .

அவர்களது குறிக்கோள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை எழுத படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கடிதம் எழுதவும்,  பேருந்து மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளை படிக்குமளவிற்கும்  கற்று கொண்டால் போதும் என்ற விருப்பத்துடன் தினமும் மாலை வேளைகளில் எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். அப்பா ஒரு அரைமணி நேரம் அவர்களுக்கு கற்று கொடுப்பார். பிறகு அன்று கற்றுக்கொண்டவைகளை  என்னிடம்  எழுதிக்காட்டிவிட்டு   வீட்டிற்கு  போகுமாறு கூறிவிட்டுவெளியே சென்று விடுவார்  (நான்காம் வகுப்பில்  தமிழ் ஆங்கிலம் பிழை இல்லாமல் எழுதுவேன் நான் , நம்புங்கப்பா ...)

இப்படியாக என்னில் மூத்தோர்களுக்கு ஆசிரியை பணி செய்யும் வாய்ப்பு எனக்கு ...


அவர்கள் செய்யும் பிழைகளை அப்பாவிடம் கூறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக  "கண்ணு அப்பாகிட்ட சொல்லாத, உனக்கு நாளைக்கு மிட்டாய் வாங்கி தரோம் " என்பார்கள். நானும் ஒரு கடமை தவறாத அரசு அதிகாரியின் தோரணையுடன் "அண்ணா லஞ்சமா? அப்பாகிட்ட சொல்லட்டுமா" என்று கோபித்துக்கொள்வேன். மேலும் அப்பாவிடம் சொல்லியும் விடுவேன். அதனால் என்னை வெறுப்பேற்ற அடுத்தநாள் தம்பி தங்கைக்கு மட்டும் மிட்டாய் வாங்கி வருவார்கள். இப்படியே மாதங்கள் உருண்டோடின. ஓரளவிற்கு எழுதப்படிக்க   கற்றுக்கொண்டனர். (ஓரளவிற்கு தான்). கடிதம் எழுதுவது எப்படி ?, முகவரி எங்கே எழுத வேண்டும் என்றெல்லாம் அப்பாவிடம் சந்தேகம் கேட்டு தெரிந்து கொண்டனர்.


இந்நிலையில் திடீரென ஒரு நாள் அவர்கள் நால்வரையும் காணவில்லையென்று அவர்களின்  பெற்றோர்கள்  எங்கள் வீடு தேடிவந்து என் தந்தையிடம் கேட்க,  என் தந்தையும்  எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் குழம்ப,  அனைவருக்கும் அச்சம் கலந்த அதிர்ச்சி.  இப்படியே ஒரு வாரம் போனது. ஒரு நாள் அவர்களில் ஒருவரின் வீட்டிற்கு, அவர்களால் சிறு சிறு எழுத்து பிழைகளுடன் எழுதப்பட்ட  கடிதம் ஒன்று வந்தது. அதில் அனைவரும் தங்களை மன்னிக்கும்படியும், அவர்களது கடிதம் எழுதும் திறன் மற்றும் பேருந்து பெயர்ப்பலகை  படிக்கும் திறனை சோதிப்பதற்காக நால்வரும் சென்னை சென்றிருப்பதாகவும், விரைவில் ஊர்  திரும்புவதாகவும் எழுதி இருந்தனர்.  அவர்களின் பெற்றோர்கள்  "வாத்தியார் படிக்க எழுத சொல்லிகொடுத்தது  தான் எங்கள் பிள்ளைகள் ஊரை விட்டு வெளியே செல்ல காரணம்" என்ற ரீதியில் பேச தொடங்கி விட்டனர். அப்பாவிற்கும் கவலை தான். இந்நிலையில் ஒரு பத்து நாட்கள் கழித்து அவர்கள் அனைவரும் ஊர் திரும்பினர் .

அடுத்த நாள் அனைவரும் அப்பாவின் முன்னிலையில் தலைகுனிந்த நிலையில்....

"ஏன் இப்படி செய்தீர்கள்"  என்று அப்பா கோபத்துடன்  கேட்க "நீங்கதானே சார் பயப்படாம  தைரியமா எதையும் செய்யணும்னு  சொல்லி குடுத்தீங்க..வெளியூர் போறோம்னு சொல்லி இருந்தா எங்க வீட்ல அனுப்பி இருக்க மாட்டாங்க, அதான் சொல்லாம போனோம் .  இப்போ எங்களுக்கு தைரியம் வந்துடுச்சி, நாங்க சென்னையில் போட்ட லெட்டர் நம்ம ஊருக்கு வந்துடுச்சி..எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா" என்று அவர்கள் கூற அவர்களை பாராட்டுவதா கண்டிப்பதா என்று புரியாத நிலையில் அப்பா ...

"எப்படி இருந்தாலும் நீங்கள் நிறைய கற்றுக்கொண்டு விட்டீர்கள்  . எனவே இனி மாலை வகுப்புக்கு  வரவேண்டிய தேவை இல்லை" என்று அப்பா கண்டிப்புடன் கூறிவிட்டார். அவர்களும் சிறிது நேரம் கெஞ்சி பார்த்துவிட்டு வருத்ததுடன் சென்று விட்டனர்.

எனக்குதான்  சில நாட்களுக்கு  அதிகாரம் செய்வதற்கு அண்ணன்கள் இல்லாமல் மிகவும் வருத்தமாக இருந்தது. வழியில் எங்காவது எப்போதாவது  பாரத்தால் மிகவும் பாசத்தோடு  "கண்ணு நல்லா இருக்கியா?" என்று விசாரிப்பார்கள். "நல்லா படிக்கணும்" என்று அறிவுரை வேறு.

அவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் துணிச்சல் எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் இன்று நினைத்து பார்த்தால் வியந்து போகிறேன் .